அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டோருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

Published By: Vishnu

02 Jan, 2019 | 07:53 PM
image

சீரற்ற காலநிலையின் காரணமாக பல இன்னல்களுக்கு முகங்கொடுத்த வடக்கு மாகாண மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்கியதுடன், அவர்களின் நலன்புரி தேவைகளுக்காக தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முப்படையினர், பொலிஸார், மாகாண ஆளுநர்கள், அரச அதிகாரிகள், தன்னார்வ நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் விடுத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் இந்த விசேட நிவாரண வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் முப்படையினர் துரிதமாக செயற்பட்டதுடன், அவர்களின் அர்ப்பணிப்பின் காரணமாக உயிர் மற்றும் உடமைகளின் சேதங்களை குறைக்க கூடியதாக இருந்தது.

பாதுகாப்பு துறையினர் மற்றும் ஏனைய அரச அதிகாரிகள் இரவு பகலாக சேவையாற்றி அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளை தொடர்ச்சியாக வழங்கிவந்தனர்.

தனது நாட்டின் சகோதர மக்கள் அனர்த்தத்திற்குள்ளான சந்தர்ப்பத்தில் தமது கடமைகளை சரிவர நிறைவேற்றி, மனிதாபிமான சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய அனைவரின் சேவையையும் ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31