(ஆர்.விதுஷா)

கடந்த 15 மணித்தியாலத்திற்குள் நாட்டின்  பல்வேறுபட்ட பகுதிகளில்  இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

நேற்று மாலை 6 மணி தொடக்கம் இன்று காலை 8 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளில் பதிவான விபத்துக்களில் சிக்கியே  இவர்கள் உயிரிழந்துள்ளனர். 

குறித்த விபத்துக்கள் கலேவெல, கொடதெனிய , நீர்கொழும்பு ,கங்வெல்ல , மெரகஹாகென மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளிலேயெ பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.