(இரோஷா வேலு) 

சொகுசு வாகனங்களை வாடகைக்கு பெற்றுக்கொண்டு ஏமாற்றி வந்த இருவர் மிரியான விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் ஹோமாகம பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

 

அத்துருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 மற்றும் 56 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

ஹோமாகம பொலிஸில் வாகனங்கள் மோசடி குறித்து பதிவாகிய முறைப்பாடுகளை கவனத்தில் கொண்டு சந்தேகநபர்களை தேடி வலைவீசிய மிரியான விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட விசேட தகவலுக்கமைவாக சந்தேகநபர்கள் இருவரும் இன்று காலை கைதுசெய்யப்பட்டனர். 

இதன்போது அவர்களிடமிருந்து மூன்று சொகுசு கார்களையும் பொலிஸார்  கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து குறித்த நபர்களை ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவர்களை பொலிஸ் காவலில் எடுத்து விசாரணைக்குட்படுத்த உத்தரவிட்டுள்ளார்.