(இராஜதுரை ஹஷான்)

மத்திய வங்கியில்  இடம் பெற்ற பிணைமுறி  மோசடி  தொடர்பில்  நாட்டு மக்களுக்கு பொறுப்பு  சொல்ல வேண்டிய தேவை அலோசியசுக்கும்,  கசுன் பலிசேனவிற்கும் கிடையாது.  பிரதமர் ரணில் விக்ரமசிங்க , முன்னாள்  மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் மற்றும்  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன ஆகியோரே  பொறுப்பு சொல்ல வேண்டும்.  ஜனாதிபதி  விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினை ஜனாதிபதி  மூடி மறைப்பதற்கும்,   பிணைமுறி மோசடி தொடர்பில் வழக்கு  தாக்கல் செய்யாமல் இருப்பதற்கான   காரணம் என்ன  என  மக்கள் விடுதலை முன்னணியின்   தலைவர்  அனுர குமார திஸாநாயக்க  கேள்வியெழுப்பினார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை  காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை  விமர்சிக்கும் வேளையில் மாத்திரமே ஜனாதிபதிக்கு  பினைமுறி  விவகாரம் நினைவிற்கு  வரும்.  விசாரணை ஆணைக்கு   சமர்பித்த அறிக்கையினை இதுரையில் ஜனாதிபதி முழுமையாக  பாராளுமன்றத்திற்கு  சமர்ப்பிக்கவில்லை.   இதற்கான காரணம் என்ன  அரசியல் மேடைகளில் தனது விளம்பரத்திற்காக  செய்யும்  பிரச்சாரங்களை ஜனாதிபதி நடைமுறைப்படுத்த வேண்டும். பினைமுறி விவகாரத்தில் 1000பில்லியன் அரச நிதி  மோசடி  செய்யப்பட்டுள்ளது. என்று  ஜனாதிபதியே குறிப்பிட்டார். 

ஆனால்   இவ்விடயம் தொடர்பில் அதன் பிறகு அவர் எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும்  முன்னெடுக்கவில்லை.