கே வி ஆனந்த் இயக்கத்தில்,‘சூர்யா 37’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட படத்திற்கு, தற்போது ‘காப்பான் ’என பெயரிடப்பட்டு, படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.

அயன் மாற்றான் ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கே வி ஆனந்தும், நடிகர் சூர்யாவும்இணையும் மூன்றாவது படம் ‘காப்பான்’. இதில் சூர்யாவுடன் மோகன்லால், சயீஷா, ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரகனி உள்ளிட்டபலர் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தின் வசனத்தை எழுத்தாளர்  பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதுகிறார். எம் எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தை எடிட்டர் ஆண்டனி படத்தை தொகுக்கிறார்.

இதில் மோகன்லால் பிரதமராகவும், அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படபிடிப்பு எழுபது சதவீதம் முடிவடைந்த நிலையில். சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என். ஜி.கே என்ற படத்தின் இறுதிக்கட்ட படபிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதன் படபிடிப்பு ஜனவரியில் முடிவடைந்த பின், காப்பான் படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.