வடக்கு மற்றும் தெற்கில் அடிப்படைவாத குழுக்கள் செயற்பட ஆரம்பித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த அடிப்படைவாத குழுக்களினால் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்ககூடாது எனவும் கோரிக்கை விடுத்தார்.

கொழும்பில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

வடக்கில் சி.வி. விக்னேஸ்வரனும் தெற்கில் மஹிந்த ராஜபக்ஷவும் அடிப்படைவாதத்தை தோற்றுவித்து வருகின்றனர். 

மேலும் புதிய அரசியல் அமைப்பை இறுதி செய்தவற்கு நீண்ட செயல்முறை உள்ளது. அந்த பணிகள் இன்னமும் நிறைவடையவில்லை. புதிய அரசியல் அமைப்பின் வரைபு அடுத்த மாதத்திற்குள் முடிவடையும் என கூறப்பட்ட போதும் அடுத்த மாதத்திற்கு முடிவடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.