அவுஸ்திரேலிய இளையோர் கிரிக்கெட் அணியுடன் மோதவுள்ள 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ  அனுமதி வழங்கியுள்ளார். 

நிபுன் தனஞ்சய தலைமையிலான 15 பேர் கொண்ட இக் குழாமில் கமில் மிஷாரா, கமேஜ் சொனால தினுஷா, ஆஷிஷ் ஏஞ்சலோ டேனியல், ரோஹன் சஞ்சய்யா, பிரவீன் நிமேஷ் டி சில்வா, அவஷ்கா தரிந்து, திலம் சுதேரா திலகரத்ன, கவிஷ்கா லக்ஷன், சாமந்தி பியமல் விஜேசிங்க, தவேஷ அபிஷேக் கஹதுவராச்சி, தில்ஷன் மதுஷங்க, நவோத் பரணவிதான, மொஹமட் சாமாஸ் மற்றும் ரவீன் டி சில்வா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.