பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார பொலிஸ் சீருடையில் எடுத்த புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அரசியல் பிரவேசத்துக்கு முன்னதாக பாலித ரங்கே பண்டார  பொலிஸ் அதிகாரியாக பணியாற்றியிருந்ததோடு உப பொலிஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த வருடம் நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான ரங்கே பண்டார பெயரும் கூடுதலாக பேசப்பட்டிருந்தது.

அதாவது மஹிந்த ராஜபக்ஷ அணியினர் தன்னை 50 கோடி ரூபாவுக்கு பேரம் பேசியிருந்ததாக கையடக்கத் தொலைபேசி குரல் பதிவுகள் மூலம் தெரியப்படுத்திருந்தார்.

இந்த விடயம் தெற்கு அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. மேலும் பல சவால்களுக்கு மத்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் அட்சியமைத்துள்ளது.

இதில் பாலித ரங்கே பண்டாரவுக்கு அமைச்சு பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவருக்கு எவ்வித அமைச்சு பதவியும் வழங்கியிருக்கவில்லை.

இந்நிலையில் தனக்கு அமைச்ரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்படும் என எதிர்பார்த்தேன். ஆனால் வழங்கவில்லை. இவ்விடயம் தொடர்பில் எனக்கு கவலையளித்தாலும் மஹிந்த அணியினருடன் ஒருபோதும் இணையமாட்டேன் என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பின்னணியிலேயே புதுவருடமான நேற்று பொலிஸ் சீருடையில் புகைப்படங்களை எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார.