பிரேஸில் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜேர் போல்சோனாரா நேற்றைய தினம் பலத்த பாதுகாப்புடன் பதவியேற்றுக் கொண்டார். 

பிரேஸில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் இராணுவ தளபதியும், சமூக தாராளவாத கட்சியின் தலைவருமான 63 வயதையுடைய ஜேர் போல்சோனாரா வெற்றி பெற்றிருந்தார்.

இந் நிலையில் நேற்யை தினம் பிரேஸிலின் தலைநகர் பிரேசிலியாவில் உள்ள பாராளுமன்றத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது புதிய ஜனாதிபதியான ஜேர் போல்சோனாரா பதவியேற்றுக்கொண்டதுடன், துணை அதிபராக ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல் ஹேமில்டன் மவுராவும் பதவியேற்றுக் கொண்டார்.