மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான அமரர் பெரியசாமி  சந்திரசேகரனின் சிரார்த்த தினத்தை முன்னிட்டு நேற்று மலையக மக்கள் முன்னணியின் பதுளை சமூக மேம்பாட்டு பணியகத்தில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினராக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் படத்திற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு மலர் தூவி அஞ்சலி செய்யப்பட்டன.

மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், மாவட்ட தலைவர்கள், தோட்டக்கமிட்டி தலைவர்கள், ஊடகவியலாளர்கள், நலன் விரும்புகள் எனபலரும்இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இந்நிகழ்வின் விசேட அம்சமாக சிறந்த ரக மா மரக் கன்றுகள் மக்களுக்கு விநியோகிக்கும் நிகழ்வினை நிகழ்வின் பிரதம விருந்தினரான பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.