பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய 29 அமைச்சர்களும் கலந்து கெள்ளவுள்ளனர்.

புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் குறித்த விபரங்கள் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்றைய அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அன்றைய தினம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றாலும் அப்போது இலாகாக்கள் குறித்த விபரங்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. 

தற்போது வர்த்தமானி வெளிவந்துள்ள நிலையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.