(இரோஷா வேலு) 

காலி காதுவத்த பிரதேசத்தில் நேற்று இரவு துப்பாக்கி முனையில் பல்பொருள்  வர்த்தக  நிலையத்தில்   6 இலட்சத்துக்கும் அதிகமான பணத்தை, மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள் இருவர் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

 

வர்த்தக  நிலையத்தில்   மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு 11.05 மணியளவில் வந்த இருவரும், வானை நோக்கி துப்பாக்கி சூட்டு நிகழ்த்தியுள்ளனர். 

இதனையடுத்து அங்கிருந்த பணியாள் ஒருவரின் தலையில் துப்பாக்கியை வைத்து குறித்த தனியார்  வர்த்தக வர்த்தக  நிலையத்தில் இருந்த 6 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாயை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். 

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் கருப்பு முகமூடி அணிந்திருந்ததுடன் இருவரும் கைகளில் துப்பாக்கி தாங்கியிருந்ததாக அந்த நிலையத்தின் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

எனினும் சந்தேகநபர்களை இனங்கண்டிறாத பொலிஸார் சி.சி.டி.வி. பதிவுகளை பரிசோதனையிட்டு வருவதாகவும் தெரியவருகின்றது. 

இச்சம்பவத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயங்களை ஏற்பட்டிருக்க வில்லை. மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.