(இராஜதுரை ஹஷான்)

தேசிய அரசாங்கம் கடந்த மூன்றரை  வருடம் போலில்லாது பயனுடையதாக செயற்பட வேண்டும். துரிதகாலத்திற்குள்    நாட்டின்  அபிவிருத்திகளை முன்னெடுக்காவிடின் பாரிய   பின்னடைவினை  எதிர்கொள்ள நேரிடும் என ஐக்கிய தேசிய  கட்சயின் பாராளுமன்ற உறுப்பினர் முஜ்பூர் ரஹ்மான் தெரிவித்தார்.

அலரி  மாளிகையில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற    புதுவருட  கொண்டாட்ட  நிகழ்வில் கலந்து கொண்டு  கருத்துரைக்கும் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

இடைப்பட்ட  காலத்தில்  அரசாங்கம்  கடந்த  மூன்று   வருடத்த்னை போன்று செயற்பட்டால்  பாரிய  பின்னடைவினை    எதிர்கொள்ள  நேரிடும். அரசியல் சூழ்ச்சியினை தோற்கடித்து மீண்டும் கைப்பற்றிய அதிகாரங்கள் பறிபோனால் ஒருபோதும்  மீள  பெறமுடியாது. கட்சிக்காக  கடுமையாக உழைத்த   பல உறுப்பினர்கள் காணப்படுகின்றார்கள். அவர்கள் அனைவரும்  திருப்தியடையும் விதத்தில் பொறுப்பாக்கப்பட வேண்டும் என்றார்.