(ஆர்.விதுஷா)

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தில் வீழ்ச்சி கண்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. 

2017 ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 101 ஆக காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை  2018 ஆம் ஆண்டாகும் போது 50  ஆயிரத்து 163 ஆக பதிவாகியுள்ளது.

 மேல்மாகாணத்திலேயே  37.1 வீதமாக டெங்கு நோயாளர்களின்  எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

 அதிலும் 2017 ஆம் ஆண்டு 29 ஆவது வாரத்திலேயே இவ்வாறு டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்த மட்டத்தில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.