(க.கமலநாதன்)

கடந்த தேர்தல் காலங்களில் இடம்பெற்ற செயற்பாடுகளினால் சுதந்திர கட்சிக்கு இருந்த 20 வீதமான சிறுபான்மை மக்களின் ஆதரவையும் இழக்க நேரிட்டது.ஆனால் தற்போது வடக்கு தமிழ் மக்களின் முழுமையான ஆதரவை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி சுதந்திர கட்சியின் தலைவராகவுள்ளார்.

எனவே புதிய தலமைத்துவத்தின் கீழ் புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டு சுதந்திர கட்சி இழந்துள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவினையும் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டுமென வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள வடக்கு முதல்வர் அலுவலகத்தில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.