(இரோஷா வேலு)

விசேட அதிரடி படை மற்றும் போதைத்தடுப்பு பிரிவினரின் விசேட அதிரடி நடவடிக்கைகளில் ஹோமாக பகுதியில் வைத்து ஹெரோயின் மற்றும் கைக்குண்டுடன் பாதாள உலக உறுப்பினரான ஐ.டி கைதுசெய்யப்பட்டுள்ளார். 

காலை 10.45 மணியளவில் இவர் ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனாகொட விகாரைக்கருகில் வைத்தே குறித்த நபர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

மோட்டார் காரொன்றில் பயணித்துக் கொண்டிருந்த  சந்தேகநபரை இடைமறித்து சோதனையிட்ட பொலிஸாரால் குறித்த வாகனத்திலிருந்து கைக்குண்டொன்றும் 60 கிராம் 550 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த மோட்டார் காரையும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபர் தடுத்து மேலதிக விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளார். 

அவரிடம் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டு விசாரணைகளில் குறித்த நபர் ரத்மலானை பகுதியைச் சேர்ந்த பாதாள உலக தலைவரான அஞ்சுவின் நெருங்கிய சபா என்பதும், தனுஷ்க தொடுவில என்ற சைமாவின் ஹெரோயின் போதைப்பொருள் வியாபார முகவர் என்பதும் தெரியவந்துள்ளது.