அஜித் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இலங்கை கவிஞரின் “தூக்குதொர“ பாடல் அஜித் நடிப்பில், சிவா இயக்கியுள்ள படம் ‘விஸ்வாசம்’. பொங்கலுக்கு வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளதுடன் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இமான் இசையமைத்திருக்கிறார்.சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள ‘அடிச்சுத் தூக்கு’ என்ற வரிகளுடன் தொடங்கும் பாடல் ஓப்பனிங் பாடலாக இணையத்தில் வெளியானது.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலவாறான விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில், தல ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் விதமாக தான் இப்பாடலை எழுதியிருந்தால் எவ்வாறு வந்திருக்கும் என்று சிந்தித்த இலங்கையைச் சேர்ந்த கவிஞர் அஸ்மின் ‘‘தூக்குத்தொர பேரக்கேட்டா” ஓப்பனிங் சாங் ஒன்றை எழுதித் தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். பின்னா் அதை முறையாக இசையமைத்துப் பாடலாக வெளியிட முடிவு செய்தார் பாடலாசிரியர் அஸ்மின். ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கல்லூரியில் மாணவர்களுக்கு பியானோ பயிற்றுனராக இசையமைப்பாளர் தஜ்மீல் ஷெரீப் இப்பாடலுக்கு இசையமைத்து பாடியுள்ளார். 

அஜித் ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் மாஸான வரிகளோடு வெளியாகியுள்ள இப்பாடல் யூடியுப், பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நம்மவரான அஸ்மின், விஜய் ஆண்டனி நடித்த `நான்’ படத்தில் `தப்பெல்லாம் தப்பே இல்லை...’ என்கிற பாடலை எழுதியவர். ஜெயலலிதா இறந்தபோது, `வானே இடிந்ததம்மா...’ என்ற பாடலையுதட எழுதியிருந்தவா் ஆவார்.