(ஆர்.விதுஷா)

வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள  1099 ஏக்கர்  நான்கு அரச  காணிகளை  அச்சுறுத்தல்  இல்லாத வகையில்  விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

எதிர் வரும் வாரத்தில்   குறித்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக  இராணுவ தலைமையகம் மேலும்‍ சுட்டிக்காட்டியுள்ளது.     

இந்த நிலையில்  டிசம்பர் 31 ஆம் திகதிக்கு  முன்னர்  இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை  விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்மந்தப்பட்ட தரப்பிற்கு அறிவுறுத்தியிருந்தார்.   அதற்கமைய அரச மற்றும் தனியாருக்கு சொந்தமான சுமார் 263.55 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன், காணிகள் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது .