மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தினால் சாதிக்கமுடியாமல் போனதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கு அளிக்கும் ஆதரவின் மூலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சாதிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியிருக்கிறார்.

வடமத்திய மாகாணத்தில் நொச்சியாகம பகுதியில் நேற்று பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றிய தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ராஜபக்ச, அரசாங்கத்துக்கு அளிக்கின்ற ஆதரவு மூலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் ஆதாயம் அடையக்கூடும்.போரின் முரமாக அடையமுடியாததை அரசியலமைப்பின் ஊடாக அவர்கள் அடைந்துவிட ஒருபோதும் அனுமதிக்கவே கூடாது என்று குறிப்பிட்டார்.
புதிய அரசியலமைப்பொன்றை பிரதமர் விக்கிரமசிங்க அறிமுகப்படுத்தும்போது சூழ்ச்சித்தனமான வழிவகைகளின் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியல் சுயாட்சியைப் பெற்றுக்கொள்வதற்கு தாங்கள் அரசாங்கத்துக்கு அளிக்கின்ற ஆதரவை பயன்படுத்துவார்கள் என்று எச்சரிக்கை செய்த ராஜபக்ச இந்த நாடு பிரிக்கப்படவோ அல்லது துண்டாடப்படவோ முடியாதது.எல்லோரும் ஐக்கியப்பட்டு நிற்கவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM