போடேஸ் தோட்ட 30 ஏக்கர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிரந்தர வீடுகளை அமைக்கு பணி ஐனவரி மாதம் 4ஆம் திகதியன்று அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கணபதி நகுலேஸ்வரன்  முன்னெடுத்து வருவதோடு, நேற்று தற்காலிக குடியிருப்பு அமைக்கும் பகுதிக்கு விஜயம் செய்த போது தனது கருத்தை தெரிவிக்கையில், இத்திட்டத்திற்காக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 30மில்லியன் ரூபாவில் இவ்வீடமைப்பு அமைக்கப்படவுள்ளதாகவும் இத்திட்டத்தை துரித கதியில் முன்னெடுக்க வேண்டும் என கூறியதாகவும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

 தற்காலிக குடியிருப்பு அமைக்கும் பணியில் மக்களின் சுகாதார வசதிகளை  கருத்தில் கொண்டு சுகாதார அதிகாரிகள் அவ்விடத்திற்கு வருகை தந்து அம்மக்களை பரிசோதித்துள்ளதாகவும் நாளை புவியியல் ஆராய்ச்சி நிபுணர்கள் புதிதாக அமைக்கப்படவுள்ள வீடமைப்பு திட்டத்திற்கான இடத்தை கண்டறிய வரவுல்லதாகவும் தெரிவித்தார்.