அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். 

இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த அமைச்சர் சஜித் கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். 

வெள்ளத்தால் பாதிக்ப்பட்ட மக்களிற்கான அரிசி தொகுதி ஒன்றினை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்த அமச்சர் தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் வெள்ள அனர்த்தத்தின் பாதிப்புக்கள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார். 

குறித் சந்திப்பில் அமைச்சர் திகாம்பரமும் கலந்து கொண்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், திலகராஜா, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடலின் நிறைவில் அமைச்சர் சஜித் ஊடகங்களிற்கு கரு்தது தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களிற்கு வீடு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து கிளிநாச்சி பன்னங்கண்டி பகுதிக்கு விஜயம் மெற்கொண்டிருந்த அமைச்சர் குழு அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு அரிசிகளை பகிர்ந்தளித்தனர்.