கடந்த மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்த குழுவின் அறிக்கையை பகிங்கரப்படுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த அறிக்கை நவம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு இதுவரையில் அறிக்கை குறித்து எந்தப் பேச்சையும் காணவில்லை என்று கூறியிருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிக்கை மூடிமறைக்கப்படுவதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய எந்தப் பிரயத்தனத்தையும் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் அதைப் பகிரங்கப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தப்போவதாகவும் தெரிவித்தார்.