வவுனியா ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் கிணற்றிலிருந்து  24வயதுடைய ஜெகமோகன் என்ற நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதிகாலைவேளையிலே தந்தை வயலுக்கு சென்று வீடு திரும்பிய சமயத்தில் வீட்டில் மகனை காணவில்லை என தேடியபோது இளைஞர் கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்.

இச்சம்பவத்தினை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்,  மரணத்திற்கான காரணத்தையும் பொலிஸார் ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.