நல்லாட்சி அரசானது நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்ச்சியாக விளையாடுவதோடு மீண்டும் விடுதலைப்புலிகள் அமைப்பினரின் தற்கொலை குண்டு தாக்குதல் உட்பட அனைத்துவிதமான பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் வழியமைத்து கொடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் விரவன்ஷ குற்றம் சுமத்தினார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பை இல்லாதொழித்து எமது பொருளாதாரத்தை நாளுக்கு நாள் சீரழிக்கும் இந்த அரசாங்கத்தினை செயற்பாடுகளுக்கு முடிவுகட்ட அனைவரும் ஒரணியாக அணிதிரல வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கட்சியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விமல் விரவன்ஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

(எஸ்.ரவிசான்)