குடும்பப் பெண் ஒருவரை அவரது கணவரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்ற மற்றொரு குடும்பத்தலைவர் விபத்தில் சிக்கி மாட்டிக்கொண்ட சம்பவமொன்று புன்னாலைக்கட்டுவான் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. 

வேன் ஒன்றில் கடத்திச் சென்ற போது, வீதியால் வந்த பஸ்ஸுடன் மோதுண்டு விபத்து இடம்பெற்றது. 

மனைவியை வேனில் கடத்திச் சென்ற போது, பின்னால் மோட்டார் சைக்களிலில் கணவர் துரத்திச் சென்றதால் இந்த விபத்து இடம்பெற்றது. 

சம்பவத்தையடுத்து கணவன் – மனைவி மற்றும் கடத்தலுடன் தொடர்புடைய குடும்பத்தலைவர் ஆகியோர் சுன்னாகம் பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.