யுனைட்டட் டிராக்டர்ஸ் அன்ட் எக்யுப்மன்ட் (பிரைவட்) லிமிட்டெட்டின் பயிற்சி நிலையத்துக்கு வணிக பிரமுகர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், நிபுணர்கள், தனியார் மற்றும் பொதுத்துறைகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள், கட்டர்பில்லர் பிரதிநிதிகள், விநியோகஸ்த்தர்கள் மற்றும் வணிக போட்டியாளர்கள் என பலரின் வரவேற்புக் கிடைத்துள்ளது.
இந்த புகழ்பெற்ற UTE இன் பயிற்சி நிலையத்துக்கு கட்டர்பில்லர் நிறுவனத்திடமிருந்து அண்மையில் பெருமைக்குரிய சேவைப் பயிற்சி சிறப்பு விருது (STEAA) வழங்கப்பட்டிருந்தது.
UTE இன் பயிற்சி நிலையத்துக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த கட்டர்பில்லர் பிராந்திய முகாமையாளர் தோமஸ் தியோ கருத்து தெரிவிக்கையில்,
“இது உலகத் தரம் வாய்ந்த ஒரு சிறந்த பயிற்சி நிலையமாக அமைந்துள்ளது” என்றார்.
கட்டர்பில்லர் (பெங்களுர் ) மாவட்ட முகாமையாளர் ஈ.சி.மனோஹர் கருத்துத் தெரிவிக்கையில், “இது ஒரு முறையாக பராமரிக்கப்படும் பயிற்சி நிலையம்” என்றார்.
கென்யாவின் தேசிய நிர்மாண சம்மேளனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்றும் இந்நிலையத்துக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த போது, இந்நிலையத்தின் சிறப்பம்சங்கள் பற்றி விசேடமாக கருத்து வெளியிட்டிருந்ததுடன், இதன் போது அவர்கள் இதுவரை காலத்திலும் பார்த்த பயிற்சி நிலையங்களுள் சிறந்ததாக அமைந்திருந்ததாக குறிப்பிட்டனர்.
நிர்மாணத்துறையின் தேவையை கருத்தில் கொண்டும், தகைமைகள் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை நிர்மாணத் துறையில் கொண்டிருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டும், இந்த நிலையத்தை 2013 இல், 200 மில்லியன் ரூபாய் முதலீட்டில் UTE நிறுவியிருந்தது.
இன்று, UTE பயிற்சி நிலையம் உயர் தரம் வாய்ந்த கட்டர்பில்லர் தொழில்நுட்ப நிகழ்ச்சிகளை வழங்கி வருவதுடன், இவற்றுக்கு இலங்கை மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற ;கல்வி ஆணைக்குழுவின் அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது. நிர்மாணத்துறை சாதனங்கள் தொழில்நுட்ப பயிற்சிகளில் NVQ 4ஆம் நிலை தகைமையை வழங்கும் ஒரே நிலையமாகவும் இது திகழ்கிறது.
இந்த விருது, UTE இன் பயிற்சி முகாமையாளர் நிஹால் ஜயமஹாவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த விருதை, கட்டர்பில்லரின் முன்னாள் மாவட்ட முகாமையாளர் கெவின் ஸ்ட்ரைடெம் வழங்கியிருந்தார். இந்நிகழ்வில் கட்டர்பில்லர் பிராந்திய முகாமையாளர் தோமஸ் தியோ மற்றும் கட்டர்பில்லர் (பெங்களுர்) மாவட்ட முகாமையாளர் ஈ.சி.மனோஹர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
கட்டர்பில்லரின் உலக தராதரங்களுக்கமைய, உயர் பெறுமதி வாய்ந்த பயிற்சிகள் வழங்குவதற்கான இயலுமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த கடுமையான மதிப்பீடுகளைத் தொடர்ந்து இந்த பெருமைக்குரிய விருது வழங்கப்பட்டிருந்தது.
மேலும், இந்த சேவைப் பயிற்சிகளை வழங்குவதற்கான சிறப்பு நிலையை வழங்குவதற்கு கடுமையான மதிப்பீடுகள், கட்டமைப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்படுத்தல்கள் மற்றும் நிலையத்தின் மீளாய்வுகள் போன்றன கட்டர்பில்லர் அணியின் மூலமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மேலும், இந்த கட்டர்பில்லர் ஆலோசகர் உறுதிப்படுத்துகை நிகழ்ச்சியின் பிரகாரம் (CIAP) , விற்பனை ஆலோசகர்களுக்கும் தமக்குரிய பிரத்தியேகமான பயிற்றுவிப்பு ஆளுமைகள் உறுதிப்படுத்துகையை கொண்டிருக்க வேண்டியதை உறுதி செய்கிறிது.
இந்த முழுமையான செயன்முறை பூர்த்தி செய்யப்படுவதற்கு சுமார் ஒருவருட காலம் வரை சென்றிருந்தது. முகவர் பயிற்சி நிறுவனத்தினால் முகவர் சேவை பயிற்சி செயற்பாடுகள் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய, இறுதியான மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு அவை பயிலும் சாதனங்கள், ஊழியர்கள், செயற்பாடுகள் மற்றும் மேற்பார்வைகள் ஆகியன உயர் தராதரங்களுக்கமைய உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளன.
கட்டர்பில்லர் வலுப்பிறப்பாக்கிகள் (Power Generators)மற்றும் பாரம் தூக்கி ட்ரக்கள் (Lift Trucks)ஆகியவற்றை இலங்கையில் விநியோகிக்கும் அங்கீகாரம் பெற்ற ஒரே விநியோகஸ்த்தராக UTE திகழ்கிறது. அத்துடன், கட்டர்பில்லர் நிர்மாண மற்றும் Earthmoving தயாரிப்புகளின் விநியோகஸ்த்தராகவும் அமைந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM