பொதுமக்களின் காணிகளை விடுவிக்க இராணுவம் துரித நடவடிக்கை

Published By: Priyatharshan

30 Dec, 2018 | 06:10 PM
image

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால் தற்போது பயன்படுத்தப்படும் அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய பாதுகாப்பிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் குறித்த காணிகள் ஜனவரி மாத இரண்டாம் வாரத்தில் விடுவிக்கப்படும் என்று இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக அந்ததந்த மாகாணங்களில் இராணுவத்தால் நடத்தப்பட்டுவரும் பண்ணைகளில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான காணியையும் துரிதமாக விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைவாக இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

இதற்கமைய வடமாகாண விவசாயப் பண்ணை அமைந்துள்ள ஆயிரத்து 99 ஏக்கர் காணியை விடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி மாத இரண்டாம் வாரத்தில் இந்தக் காணிகள் விடுவிக்கப்படும். 

இதற்கமைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் ஜயபுரம் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட வனப்பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமான 194 ஏக்கர் விடுவிக்கப்படவுள்ளது. 

இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஜயபுரம் வடக்கு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள 285 ஏக்கர் காணியும் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட உடையார் கட்டுக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட வனப்பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமான 120 ஏக்கரும், மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளங்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான 600 ஏக்கர் காணியில் 500 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட உள்ளதாக இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19