எமது நாட்டில் அரசியல் குழப்பம் தற்போது தணிந்துள்ளது. இந்நிலையில் ஏனைய கட்சிகளிலிருந்து அரசாங்கத்துடன் இணையவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களைக்கொண்டு மிகவிரைவில் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதன்மூலமாக தற்போதைய அரசாங்கம் ஸ்திரத்தன்மையைப் பெறுமென சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார். 

அண்மையில் எமது நாட்டில் ஏற்பட்ட   அரசியல் குழப்பத்தின்போது சில அரசியல்வாதிகள் பதவி மற்றும் பணத்திற்காக  பொய்யான அரசாங்கத்தில் இணைந்தனர். ஆனபோதிலும் அழைப்புக்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாம் அவற்றிற்கு தலைசாய்க்காது நீதி, நியாயம் ஜனநாயகத்திற்காக அகிம்சை வழியில் போராடினோம்  என்றும் அவர் கூறினார்.

சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவை வரவேற்கும்  நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.