மதுவிற்கு அடிமையாகி, 1000 லீற்றர் மதுவை குடித்த எலி!: அதிர்ந்து நின்ற பொலிஸார்...!

Published By: J.G.Stephan

30 Dec, 2018 | 11:32 AM
image

இந்தியா, உத்­த­ரப்­பி­ர­தேசம், பரோலி பொலிஸ் கட்­டுப்­பாட்டு அறையில் வைக்­கப்­பட்­டி­ருந்த ஆயிரம் லீட்டர் மது­வையும் எலி குடித்­து­விட்­ட­தாக பொலிஸார் தாக்கல் செய்­துள்ள அறிக்­கையால் உயர் அதி­கா­ரிகள் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளனர்.

இதற்கு முன் பீஹார் மாநி­லத்­திலும் மதுவை எலி குடித்­து­விட்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­தி­ருந்­தனர், கஞ்­சாவை தின்­று­விட்­ட­தாக ஜார்கண்ட் பொலி­ஸாரும், ரூபாய் தாள்களை சேதப்­ப­டுத்­தி­ய­தாக அசா­மிலும் எலி மீது பழி­போட்டு தப்­பித்­தி­ருந்­தது கவ­னிக்­கத்­தக்­கது.

பரேலி கண்­டோன்மென்ட் பொலிஸ் நிலை­யத்தின் சார்பில் சட்ட­வி­ரோத மது­போத்தல்கள், கள்­ளச்­சா­ராயம் ஆகி­யவை பறி­முதல் செய்­யப்­பட்டு போலீஸ் நிலை­யத்தில் உள்ள பாது­காப்பு அறையில் வைக்­கப்­பட்­டி­ருந்­தன. இந்­நி­லையில், அந்த மது­போத்தல்­க­ளையும், கலன்­க­ளையும் நீதி­மன்­றத்தில் ஒப்­ப­டைக்க பொலி­ஸா­ருக்கு உயர் அதி­கா­ரிகள் கடந்த புதன்­கி­ழமை உத்­த­ர­விட்­டனர்.

மதுபோத்தல்களை வைத்திருந்த களஞ்சியசாலையை திறந்த பொலி­ஸா­ருக்கு அதிர்ச்சி காத்­தி­ருந்­தது. அங்­கி­ருந்த போத்­தல்கள் அனைத்தும் வெறுமையா­கவும், கலன்­களில் மது இல்­லா­மலும் இருந்­த­தாகக் கூறப்­ப­டு­கி­றது. இதை­ய­டுத்து, இங்கு நடந்த சம்­ப­வத்தை உயர் அதி­கா­ரி­க­ளுக்கு அறிவித்துள்ளனர்.

ஆனால், இதை ஏற்க மறுத்த பரோலி மாவட்ட பொலிஸ் அதிகாரி இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right