அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ஓட்டத்தினால் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 26 ஆம் திகதி மெலர்போர்னில் ஆரம்பமான இப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 443 ஓட்டங்களை குவித்து, ஆட்டத்தை நிறுத்தியது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 151 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இதனால் 292 ஓட்ட முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 106 ஓட்டங்களை பேற்று ஆட்டத்ததை நிறுத்தியது, இதனால் அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றியிலக்காக 399 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

399 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி நேற்யை நான்காம் நாள் முடிவின்போது 8 விக்கெட்டுக்களை இழந்து 258 ஓட்டங்களை எடுத்திருந்தது. கம்மின்ஸ் 61 ரன்னுடனும், நெதன் லியன் 6 ஓட்டத்தடுனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந் நிலயைில் ஐந்தாவது நாளான இன்று காலையில் மழை பெய்ய ஆரம்பித்ததால் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கவில்லை.

பின்னர் மதிய உணவு இடைவேளைக்குப்பின் ஆட்டம் தொடங்கியது. கம்மின்ஸ் 63 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். நெதன் லியன் 7 ஓட்டம் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மாவின் பந்தில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 261 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

இதனால் இந்தியா அணி 137 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-1 என தொடரில் முன்னிலையில் உள்ளது.