தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவலினால் குறித்த வர்த்தக நிலையம் முற்றாக தீக்கரையாகியுள்ளது. 

இன்று  அதிகாலை 12.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், பிரதேச மக்களின் உதவியுடன் தலவாக்கலை பொலிஸார்  தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த தீ விபத்தில் பலசரக்கு மொத்த வியாபார நிலையமே தீக்கிரையாகியுள்ளதுடன், இதனால் ஏற்பட்ட நட்டம் தொடர்பான மதிப்பீட்டு பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு வியாபார நிலையத்தின் மின் ஒழுக்கு கோளாரினாலேயே தீ பரவல் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். 

தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.