பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள சீருடை வவுச்சர்களை வைத்து வியாபாரம் செய்யும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாடு முழுவதும் பல முறைப்பாடுகள் அமைச்சுக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.