உலகக் கிண்ண இருபதுக்கு -20 கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியை  வரலாற்று வெற்றிகொண்டு தாயகம் திரும்பிய ஆப்கான் அணிக்கு அந்நாட்டில் பலத்த வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான ஆப்கான் ரசிகர்கள் வீதியிலிறங்கி நாட்டுக் கொடிகளை ஏந்தியவாறு நடனமாடி தமது வரவேற்பை வீரர்களுக்கு அளித்தனர்.