காலி நகரில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞரொருவர் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

யுவதியொருவரை கடத்திச் செல்ல முற்பட்ட போது அதனைத் தடுக்கும் வகையில் செயற்பட்ட இளைஞரே இவ்வாறு கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த யுவதி காலி நகரில் வர்த்தக நிலையமொன்றில் பணியாற்றி வருகின்றார். சம்பவத்தின் போது யுவதி வர்த்தக நிலையத்திற்கு செல்லுகையில் முச்சக்கர வண்டியில் வந்தவர்களால் கடத்தி செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளது. 

யுவதியை கடத்தி செல்ல வந்த இளைஞருடன் காதல் தொடர்பு கணப்பட்டுள்ளதுடன் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்தே இந்த கடத்தல் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டி சாரதி மற்றும் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.