பல தசாப்தகாலமாக நிர்மாணத்துறையில் புகழ்பெற்று விளங்குவதோடு, உயர் தரம் வாய்ந்த சீமெந்துகளை விநியோகித்து வரும் டோக்கியோ சீமெந்து குழுமம், ஜப்பானிலிருந்து கிளிங்கர் இறக்குமதியை மீள ஆரம்பித்துள்ளது. 

சீமெந்து உற்பத்தியில் பிரதான மூலப்பொருளான கிளிங்கர், ‘NIPPON CEMENT-PRO’ தயாரிப்புக்கு பிரத்தியேகமான முறையில் பயன்படுத்தப்படும். வானுயர்ந்த கட்டிடங்கள் மற்றும் உறுதியான கட்டிடங்கள் நிர்மாணத்துக்காக பயன்படுத்தப்படும் சீமெந்து வகையாக இது அமைந்துள்ளது.

டோக்கியோ சீமெந்தின் குழும சந்தைப்படுத்தல் முகாமையாளர்  தஷந்த உடவத்த கருத்து தெரிவிக்கையில், 

“டோக்கியோ சீமெந்தைச் சேர்ந்த நாம், உயர் வினைத்திறன் வாய்ந்த சீமெந்து வகைகளுக்கு அதிகளவு தேவை காணப்படுகின்றமையை நன்கு உணர்ந்துள்ளோம். 

இதன் காரணமாக ஜப்பானின் தலைசிறந்த உற்பத்தியாளர் மூலம் கிளிங்கரை உற்பத்தி இறக்குமதி செய்ய தீர்மானித்தோம். டோக்கியோ சீமெந்து அண்மையில் NIPPON CEMENT-PRO வர்த்தக நாமத்தை அறிமுகம் செய்திருந்ததுடன், இதன் மூலம் 1ஆம் தர ஒப்பந்தக்காரர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளது. 

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளின் மற்றுமொரு பங்களிப்பாக, சவால்கள் நிறைந்த நிர்மாண செயற்திட்டங்களை கையாளும் ஒப்பந்தக்காரர்களுக்கு பெரும் நிவாரணமாக இந்த தயாரிப்பு அமைந்திருக்கும்” என்றார்.

டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் கலாநிதி. எம்.ஜி.எம்.யு.இஸ்மைல் கருத்து தெரிவிக்கையில், 

“NIPPON CEMENT-PRO உற்பத்தியில் ஜப்பானிய கிளிங்கர் பயன்பாட்டின் மூலமாக, உயர்ந்த கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு அவசியமான தொழில்நுட்ப தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்யக்கூடியதாக இருப்பதோடு, குறிப்பாக வெப்பநிலைகளுக்கு தகுந்த தாக்குப்பிடித்தல், 80க்கும் அதிகமான உயர் வலிமையான கொங்கிறீற் வகைகளுக்கு தாக்குபிடிக்கக்கூடிய தன்மை போன்றன இவற்றின் சிறப்புகள் உள்ளடங்கும்” என்றார்.

ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர் தர கிளிங்கர் வகையை உபயோகிப்பது எனும் தீர்மானத்தைத் தொடர்ந்து, உயர் தரம் வாய்ந்த சீமெந்து வகைகளை விநியோகிக்கக்கூடிய ஆற்றலை டோக்கியோ சீமெந்து கொண்டுள்ளதுடன், நிர்மாணத்துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லக்கூடிய இயலுமையையும் வெளிப்படுத்தியுள்ளது.