நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் கடாரம் கொண்டான் படத்தின் முன்னோட்டம் பொங்கலன்று வெளியாகவுள்ளதாக  அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்கெட்ச், சாமிஸ்கொயர் ஆகிய இரண்டு படங்களுக்கு பிறகு சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் ஆக்சன் திரில்லர் திரைப்படம் ‘கடாரம் கொண்டான்.’ இதனை ‘தூங்காவனம்’ என்ற படத்தை இயக்கிய இயக்குநரான ராஜேஷ் எம் செல்வா திரைக்கதை எழுதி இயக்குகிறார். 

இதனை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கிறார். இதில் சீயான் விக்ரமுடன் கமல்ஹாசனின் இளைய மகளான அக்சரா ஹாசன் நடிக்கிறார். சீனிவாஸ் ஆர் குதா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை, எடிட்டர் கே எல் பிரவீண் தொகுக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.

மலேசியாவின் இருட்டு உலக தாதா பற்றிய கதை என்பதால் முழு படபிடிப்பும் மலேசியாவில் நடைபெற்றிருக்கிறது. படபிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில் இந்த படத்தின் டீஸர் எப்போது வெளியாகும் என்ற ஆவல் அவரது ரசிகர்களிடத்தில் ஏற்பட்டது.

இந்நிலையில் கடாரம் கொண்டான் படத்தின் டீஸர் ஜனவரி 15 ஆம் திகதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.