சீனாவில் மைக்ரோ-சிப் சீருடைகள்

Published By: Daya

29 Dec, 2018 | 12:18 PM
image

சீனாவில் தென்பகுதியில் உள்ள குயிஷூ மற்றும் குயான்ஸி மாகாணங்களில் பாடசாலைக்கு செல்லும்  மாணவர்களுக்கு  மைக்ரோ சிப் பொருத்திய சீருடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

பாடசாலை மாணவர்கள்  அணியும் சீருடையில் மைக்ரோ-சிப் பொருத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் அணியும் ஜக்கெட்டில் தோள்பட்டையில் 2 மைக்ரோ-சிப்கள் வைத்து தைக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் பாடசாலைக்குள் நுழைந்தவுடன் மைக்ரோ-சிப் பொருத்தப்பட்டுள்ள சீருடைகள் அவர்களை போட்டோ அல்லது வீடியோ எடுக்க உதவி புரியும்.

மேலும்  பாடசாலையில் இருந்து மாணவர்கள் காணாமால் போனாலோ அல்லது வெளியேறினாலோ வகுப்பறையில் மணி அடிக்கும். அதன் மூலம் மாணவர்கள் நடவடிக்கையை கண்காணிக்க முடியும். ஆசிரியர் பாடம் நடத்தும் போது மாணவர்கள் உறங்கினாலும் மணி அடிக்கும்.

மேலும் குழந்தைகள் ஆள்மாறாட்டம் செய்து பாடசாலைக்குள் நுழைய முடியாத படி முக அடையாளத்தை ஸ்கேன் செய்யும் வசதியும் மைக்ரோ-சிப்பில் இடம் பெற்றுள்ளது.

இவை தவிர கையடக்க தொலைபேசியிலுள்ள ‘ஓப்’ மூலம் பெற்றோர் வீட்டில் இருந்தபடியே தங்களது பிள்ளைகளின் நடவடிக்கையை கண்காணிக்க முடியும். இதன் காரணமாக பாடசாலைக்கு செல்லும்  வருகைப்பதிவேடு அதிகரித்துள்ளது என்று பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right