பஸ்ஸில் பயணிக்கும் பெண்களை சூட்சுமமாக வீடியோ எடுத்தவர் சிக்கினார்

Published By: Vishnu

28 Dec, 2018 | 05:11 PM
image

(இரோஷா வேலு) 

காலி - மாத்தறை பிரதான வீதியில் கடமையில் ஈடுபடுத்தப்படும் தனியார் பஸ் ஒன்றின் நடத்துனராக கடமையாற்றி வந்த சந்தேகநபரொருவர் பஸ்ஸில் பயணிக்கும் பாடசாலை சிறுமிகள் மற்றும் பெண்களை மிக சூட்சுமமான முறையில் வீடியோ எடுத்து வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேகநபரை இன்றைய தினம் காலியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 

மீட்டியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் எச்.டி.எம். துஷாரவின் தலைமையிலான குழுவொன்றால் குறித்த சந்தேகநபர் இவ்வாறு நேற்றைய தினம் வீடியோ பதிவுகளை மேற்கொண்டிருந்த வேளையில் பொலிஸாரால் கைதுசெய்துசெய்யப்பட்டார். 

சந்தேகநபர் மிக சூட்சுமமான முறையில் பதிவுகளை மேற்கொண்டிருந்த பெருந்தொகையான வீடியோ காட்சிகளை கொண்ட மூன்று கையடக்க தொலைப்பேசிகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தங்காலையைச் சேர்ந்த 32 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இவரை கைதுசெய்து அவரிடம் மேற்கொண்டிருந்த விசாரணைகளில் குறித்த நபர் இவ்வாறு பஸ்ஸில் பயணிக்கும் பெண்களை புகைப்படம் எடுத்தும், அவர்கள் பேரூந்தில் ஏறும் இறங்கும் வேளையில் மிக சூட்சுமமான முறையில் அந்தரங்க பகுதிகளை வீடியோ எடுத்தும் அதனை ஹிக்கடுவை கடற்கரைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05