(இரோஷா வேலு) 

அளுத்கடை நீதிமன்ற பிரதேசத்தில் வைத்து வாழைத்தோட்ட பொலிஸாரால் இன்றையதினம் பகல் கைத்துப்பாக்கியுடன் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் போது சமித்புர மட்டக்குளியைச் சேர்ந்த 48 வயதுடைய மாவத்தகே பிரசன்ன என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இவரை கைதுசெய்த வேளையில் அவரிடமிருந்து கைத்துப்பாக்கியொன்றும் அதற்கு பயன்படுத்தக்கூடிய 5 துப்பாக்கி ரவைகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்தேகநபரை கைதுசெய்துள்ள வாழைத்தோட்ட பொலிஸார் அவரை இன்று அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர். 

மேலும் சந்தேகநபர் தொடர்பில் பல்வேறு திட்டமிட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் காணப்படுவதாகவும் அது தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் வாழைத்தோட்ட பொலிஸாரால் குறித்த நபர் எதற்காக துப்பாக்கியுடன் குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளார் என்பது தொடர்பில் விசாரணைகள் முடுக்கிவிடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.