உலகின் மிகப்பெரிய எமிரேட்ஸ்ஸின் A-380 பயணிகள் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டாவது தடவையாக தரையிறங்கியுள்ளது.

துபாயில் இருந்து மெல்போர்ன் நோக்கி 420 பயணிகள் மற்றும் 22 விமான பணியாளர்களுடன் பயணித்த குறித்த விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

32 வயதுடைய விமான பணியாளர் ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகவே இன்று காலை கட்டுநாயக்கவில் தரையிறங்கியுள்ளது.

 குறித்த பணியாளர் நீர்கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சுமார் இரண்டு மணிநேரத்தின் பின்னர்  குறித்த விமான நிலையத்திலிருந்து மீண்டும் அவுஸ்ரேலியா நோக்கி புறப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் புனரமைக்கப்பட்ட பின்னர் உத்தியோகபூர்வமாக, கண்காட்சி நிமித்தம் எமிரேட்ஸ்ஸின் A-380 ஏற்கெனவே ஒரு தடவை தரையிறங்கியது. இந்நிலையில், இன்று இரண்டாவது தடவை அவசர தேவை நிமித்தம் தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தகது.