(எம்.ஆர்.எம்.வஸீம்)

எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்துக்குள் எதிர்க்கட்சி காரியாலயம் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு வழங்கப்படும். அத்துடன் அரசாங்கத்தில் இணைந்துகொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்த கொள்கையளவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக எழுந்திருக்கும் சர்ச்சை தொடர்பாக குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

கட்சியின் மத்திய செயற்குழு அடுத்தவாரமளவில் மீண்டும் இடம்பெறும்போது அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.