(நா.தனுஜா)

வட, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது ஆரம்பத்திலிருந்தே இராணுவ வீரர்கள் மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வந்ததுடன், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உதவிகளையும் தொடர்ச்சியாக வழங்கி வந்தனர்.

இந்நிலையில் அங்குள்ள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு அரசியல்வாதியும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட போது உடனடியாக விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்திருக்கவில்லை. 

அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டே வெள்ள மீட்பு பணிகளில் இராணுவத்தினரின் உடனடி செயற்பாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்தேன் என இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்தார்.