ஜம்முகாஷ்மீரில் 65 வயதுடைய வயோதிபப் பாட்டி ஒருவர் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் ஹக்கிம் டின். 80 வயதாகும். அவரது மனைவிக்கு 65 வயது. இவர்களுக்கு ஒரு மகன் இருந்த நிலையில் ஹக்கிம்மின் மனைவி கர்ப்பமுற்றார்.

இது மருத்துவ உலகில் அதிசயமாக பார்க்கப்படுகிறது. மேலும், ஒரு பெண்ணிற்கு 45 முதல் 50 வயதில் மாதவிடாய் நின்றுவிடும். அதன்பிறகு அவர்களால் குழந்தை பெற்றெடுக்க முடியாது. என்பதே உண்மை.

ஆனால் இந்த விஷயத்தில் 65 வயதாகியும் இவர் கர்ப்பமுற்றிருக்கிறார். அந்த மூதாட்டி சுகப்பிரசவம் மூலம் ஒரு அழகிய பெண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.

இது மருத்துவ உலகில் நடைபெற்றிருக்கும் அதிசயம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்து.