வடக்கு மாகாணத்தில் எற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பு காரணமாக அதிகளவாக பாதிக்கப்பட்ட முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் மன்னார் மாவட்டத்தில் நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் பணியில் இளைஞர் குழுவினர் ஈடுபட்டுள்ள நிலையில், ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் நேற்று வியாழன் கிழமை நேரடியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, தேவிபுரம் இடைதங்கல் முகாமில் உள்ள 102 குடும்பத்தினருக்கு உலர் உணர்வு பொருட்கள் அடங்கிய பொதியும், 60 குடும்பங்களுக்கு  நுளம்பு வலையும் ,சிறுவர்களையும்,நோயாளர்களையும் கொண்ட குடும்பத்திற்கு பால்மாவும் வழங்கப்பட்டது.