சவூதி அரேபியாவிற்கு 24 வருடங்களுக்கு முன்னர் பணிப் பெண்ணாக சென்று எந்தவொரு தகவலும் இன்றி இருந்த பெண்னொருவரின் சடலம் விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் ஆணைமடு மஹாஉஸ்வேவ பிரதேசத்தை சேர்ந்த பெண்(62) என தெரியவந்துள்ளது. குறித்த பெண்ணின் உறவினர்கள் இந்த செய்தியினை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவர் 1992 ஆம் அண்டு பணிப் பெண்ணாக சவூதி அரேபியாவிற்கு சென்றுள்ளார். எனினும் 2 மாதங்களுக்கு பிறகு அவர் பற்றிய எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என குறித்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர். பல வருடங்களாக அவர் பற்றிய எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில் அவர் இறந்திருக்க கூடும் என நினைத்து உறவினர்கள் சமய சடங்குகள், தானம் போன்றவற்றை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.