மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் பொன்னையா மாணிக்கவாசகம் எழுதிய 'கால அதிர்வுகள்' நூல் வவுனியா வாடி வீட்டு கலாசார மண்டபத்தில் நாளை சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

வவுனியா கல்வியியல் கல்லூரியின் ஓய்வு நிலை முதல்வர் கே.சிதம்பரநாதன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நூல் வெளியீட்டு வைபவத்தில் முக்கிய விருந்தினராக வீரகேசரி நாளிதழ் ஆசிரியர் ஸ்ரீகஜன் கலந்து கொள்வார்.

அத்துடன் தினக்குரல் இதழின் முன்னாள் ஆசிரியரும் வீரகேசரி இதழின் ஆலோசகருமாகிய வீரகத்தி தனபாலசிங்கம் நூலை வெளியிட்டு வைத்து, அறிமுக உரையாற்றுவார். நூலின் முதல் பிரதியை பிரபல வர்த்தகரும் வவுனியா கவிதா ஸ்டோர்ஸ் உரிமையாளருமாகிய அருளம்பலம் தணிகாசலம் பெற்றுக் கொள்வார்.