தெஹிவளை காலி வீதியில் வைத்து கடந்த சனிக்கிழமை 15 ஆம் திகதி 32 கிலோ கிரோம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட பங்களாதேஷ் பெண், மேலும் இரண்டு பங்களாதேஷ் பெண்களுடன் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொண்ட தொடர் விசாரணைகளின் மூலமும் அவரின் கையடக்கத் தொலைபேசி மூலம் மேற்கொண்ட உரையாடல்கள் மூலமும் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த வர்த்தகத்தக நடவடிக்கையுடன் தொடர்புடைய 26 மற்றும் 29 வயதையுடைய ஏனைய இரு பங்களாதேஷ் பெண்களையும் கைதுசெய்வதற்கு பங்களாதேஷ் அரசாங்கத்துடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.