பதுளை - மஹியங்கனை  வீதியினூடாக பயணித்த  லொறியை முந்தி கொண்டு சென்ற மோட்டார் வாகனம் ஒன்று    பஸ்ஸில் மோதி விபத்துக்குள்ளாகியதில், குறித்த மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் லொறிக்கு கீழே வீசப்பட்டு  உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் குறித்த நபர் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.    

கெடவத்த பகுதியை சேர்ந்த 59 வயதான நபரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக லொறி சாரதியையும், பஸ் சாரதியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.