(நா.தனுஜா)

மீண்டும் நாட்டிற்குள் இனவன்முறைகளைத் தூண்டும் வகையில் இடம்பெற்றுள்ள மாவனல்லை சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியால் விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்  என மாதுலுவாவே தம்மஸ்ஸ தேரர்  தெரிவித்தார்.  அதே போன்று காலனித்துவத்தில் இருந்து சுதந்திரம் அடைந்த நாடுகளை தமது ஆதிக்கத்திற்குள்ளேயே வைத்திருக்கும் நோக்கத்தில் மேற்குலக சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றன. அந்தவகையில் எமது நாட்டுக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தும் முயற்சியில் மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளை அந்த நாடுகள் பயன்படுத்திக் கொள்கின்றன என மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.

நேற்றைய தினம் தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு  தெரிவிக்கப்பட்டது.