வெல்லவாய எதிலிவெவ பகுதியில் அமைந்துள்ள அரச மரம் ஒன்றில் தாமரை மலரை ஒத்த மலர்கள் பூத்திருக்கின்றமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அங்கு வழிபாட்டிற்காக வந்தவர்களே இதனை கண்டறிந்துள்ளனர் எனவும், அரச மரம் ஒன்றில் இடைக்கிடையே இந்த மலர்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை காண்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அரச மரம் நோக்கி விரைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.